BREAKING: ரூ.3.05 லட்சம் மானியத்துடன் கடன்… சற்றுமுன் CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களிடையே மின்சார அடுப்புகளுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ள நிலையில், இதனைச் சமாளிக்கவும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, மின்சார அடுப்பு தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடனுதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக ₹3.05 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சந்தையில் மின் அடுப்புகளின் தட்டுப்பாட்டை நீக்கி, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், அதே வேளையில் உள்ளூர் தொழில்முனைவோரை வலுப்படுத்தவும் அரசின் இந்த முன்னெடுப்பு பெரும் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.