குஷியோ குஷி..! வங்கிகளில் கடன் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கி அதிகாரிகளின் புள்ளிவிவரப்படி, கடந்த 2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மட்டும் சுமார் ₹11,000 கோடி அளவுக்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவின் இந்தத் தேர்தல் வியூகத்திற்குப் போட்டியாக, ஆளுங்கட்சியான திமுக தரப்பிலும் கடன் தள்ளுபடி குறித்த அதிரடி அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் தேர்தல் களத்தில் ‘கடன் தள்ளுபடி’ விவகாரம் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.