கர்நூல் கிராமப்புற மண்டலத்திற்குட்பட்ட தாண்டிரபாடு கிராமத்தில், விநாயகர் ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த டி.ஜே. இசையின் அதிகபட்ச ஒலிச்சல் தாங்க முடியாமல் சிவம்மா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவமாக, நந்தியாலா மாவட்டத்தின் தொங்கா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் கௌடா என்ற இளைஞர், விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் உரத்த டி.ஜே. பாடல்களுக்குத் தீவிரமாக நடனமாடிவிட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். அதிக ஒலிச்சல் மற்றும் உடல் உழைப்பு காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களின் போது கட்டுப்பாடற்ற டி.ஜே. இசைக்கருவிகளின் பேரிரச்சல் மற்றும் நெரிசல் காரணமாக அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த இச்சம்பவங்கள், ஊர்வலங்களில் டி.ஜே. இசை பயன்பாடு குறித்த பாதுகாப்புக் கேள்விகளை எழுப்பியுள்ளன. பொதுமக்களின் நலன் கருதி இதுபோன்ற நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்பும் சாதனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…