இந்தியாவில் பல நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். ஒரு சிலர் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் மிகவும் வயது கடந்த பின்பு திருமணம் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் வயது கடந்த பின்னால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தனியாகவே வாழ்ந்து மறைந்தும் இருக்கின்றனர். அப்படி விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்து அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குமார சுவாமி மற்றும் ராதிகா:
கர்நாடக முன்னாள் முதல்வரான எச்.டி.குமார சுவாமிக்கும் தற்போது 65 வயதாகும் நிலையில், இவர் நடிகை குட்டி ராதிகாவை 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். குட்டி ராதிகாவுக்கு தற்போது 38 வயது மட்டுமே ஆகிறது. இவர்கள் இருவருக்கும் சுமார் 27 வயது வித்தியாசம். அதே போல் எச்.டி.குமாரசாமி மற்றும் குட்டி ராதிகா தம்பதிக்கு ஷமிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.

நஸ்ரியா


காவ்யா மாதவன்
காவ்யா மாதவன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான திலீப்பை திருமணம் செய்து கொண்டார். திலிப்பிற்கும் காவ்யா மாதவனுக்கும் 16 வயது வித்தியாசமாகும்.

ஆலியா பட்:
பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட் அவர்களின் மகளான ஆலியா பட் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஆலியா பட்டிற்கும் ரன்பீர் கபூருக்கும் 10 வயது வித்தியாசம் ஆகும்.

கரீனா கபூர்:
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் கரீனா கபூர். இவர் பிரபல நடிகரான சைப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கரீனா கபூருக்கும் சைப் அலி கானுக்கும் 10 வயது வித்தியாசமாகும்.

பிரகாஷ் ராஜ் – போனி வர்மா:
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ், 1994 இல் லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2009 இல் அவரை விவாகரத்து செய்த பின்னர் பிரபல பாடகி போனி வர்மாஎன்பவரை 2010 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்களுக்கு இடையே 13 வயது வித்தியாசம் உள்ளது.

காதல் சந்தியா:
காதல் திரைப்படம் மூலம் அறிமுகமான சந்தியா கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். இவரின் கணவர் பிரபல ஐடி நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். சந்தியாவை விடவும் வெங்கட் சந்திரசேகரன் 14 வயது மூத்தவர் ஆவார்.
