பொதுவாக சீரியல்களுக்கு எப்போதுமே இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி மற்றும் சன் டிவி சேனல்கள் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாக்கப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் ஏழு நாட்களுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது .சீரியலுக்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதனுடைய டிஆர்பி ரேட்டிங் இருக்கும்.
இப்படி தினந்தோறும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி நிலவரத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் 53வது வாரத்திற்கான டிஆர்பி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியல்2 6.66 TRP புள்ளிகளுடனும், பாக்கியலட்சுமி சீரியல் 6.84 டிஆர்பி புள்ளிகளோடு கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
அதேபோல சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் 2 சீரியல் கடந்த வாரம் 8.1 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் இந்த வாரம் 7.16 புள்ளிகளை மட்டுமே பெற்று கடும் சரிவை சந்தித்து எட்டாம் இடத்தில் உள்ளது. அன்னம் சீரியல் 8.31 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தை தக்கவைத்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராமாயணம் தொடர் 8.59 புள்ளிகள் உடன் ஆறாம் இடத்தில் உள்ளது.
முதல் ஐந்து இடங்களில் நான்கு இடங்களில் சன் டிவி சீரியல் தான் ஆக்கிரமித்து இருந்தாலும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை 8.87 டிஆர்பி புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது. கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்து மருமகள் சீரியல் இந்த வாரம் 9.1 புள்ளிகளுடன் நாலாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் முதல் இடத்திலிருந்து மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 9.76 புள்ளிகளோடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் 9.86 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது 10 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.