தமிழ் திரையுலகில் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேறி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள அஜித் சில பிரச்சனைகள் காரணமாக ஏராளமான திரைப்படங்களில் இருந்தும் பாதியிலேயே விலகி இருக்கிறார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவாக இருந்து பின்னர் டிராப் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மிரட்டல்:
அஜித்தை வைத்து தீனா என்ற மாஸ் திரைப்படத்தை கொடுத்திருந்த ஏ ஆர் முருகதாஸ் அவரை வைத்து அடுத்ததாக இயக்க இருந்த திரைப்படம் தான் மிரட்டல். இந்த திரைப்படத்தில் மொட்டை அடிக்க வேண்டி இருந்ததால் அஜித் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். பிறகு அதே கதையை சூர்யாவை வைத்து எடுத்து கஜினி என பெயர் வைத்து ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.

நியூ!
எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் நியூ. இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது அஜித் தான்.. அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருந்த நிலையில் அதற்காக போட்டோ சூட் எல்லாம் நடத்தப்பட்டுள்ளது. பிறகு சில காரணங்களால் இப்படத்தை டிராப் செய்து விட்டனர்.

நந்தா:
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனா திரைப்படம் தான் நந்தா. ஆனால் முதலில் சூர்யாவுக்கு பதிலாக இப்படத்தில் அஜித் தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். பிறகு படப்பிடிப்பு தொடங்கும் முன்பு அஜித்தை படத்தில் இருந்து விலகியதால் சூர்யா கமிட் ஆகி நடித்துள்ளார்.

நான் கடவுள்:
பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகிய தேசிய விருது வென்ற திரைப்படம் தான் நான் கடவுள். இந்தத் திரைப்படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க இருந்த நிலையில் இப்படத்திற்காக தாடி எல்லாம் வளர்த்து அஜித் தயாராகி வந்துள்ளார். ஆனால் திடீரென இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட மோதலால் அஜித் இப்படத்திலிருந்து விலகி விட்டாராம்.
![]()
மஹா:
நடிகர் அஜித் போலீஸாக நடிக்க கமிட்டான திரைப்படம் தான் இது. இந்த திரைப்படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வந்த நிலையில் படத்தின் சூட்டிங் எட்டு நாட்கள் மட்டுமே நடைபெற்று உள்ளது. அந்த சமயத்தில் அஜித் விபத்தில் சிக்கியதால் படத்தை கைவிட்டனர்.

காங்கேயன்:
அஜித் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வில்லன் மற்றும் வரலாறு போன்ற வெற்றி படங்கள் உருவான நிலையில் அவர்கள் கூட்டணியில் அடுத்ததாக உருவாக இருந்த திரைப்படம் தான் காங்கேயன். இந்த திரைப்படத்திற்காக அஜித் வோல்வரின் கெட்டப் எல்லாம் வைத்திருந்தார். ஆனால் இந்தத் திரைப்படமும் சில காரணங்களால் அப்படியே கைவிடப்பட்டது.

ஏறுமுகம்:
அஜித்தை வைத்து அமர்க்களம் திரைப்படத்தை இயக்கி இருந்த சரண் அடுத்ததாக அவரை வைத்து இயக்க இருந்த திரைப்படம் தான் ஏறுமுகம். ஆனால் இந்த திரைப்படத்தின் கதையில் திருப்தி இல்லாததால் அதிலிருந்து அஜித் விலகி விட்டார். பிறகு ஸ்கிரிப்ட் மாற்றி ஜெமினி என்ற பெயரில் விக்ரமை நடிக்க வைத்து வெற்றி படத்தை கொடுத்தார் சரண்.

சாருமதி:
அஜித் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தான் சாருமதி. இந்த திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்திருந்த நிலையில் படத்தின் சூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் அஜித்தை படத்திலிருந்து விலகி விட்டார்.

நேருக்கு நேர்:
ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்த விஜயும் அஜித்தும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்த திரைப்படம் தான் நேருக்கு நேர். இந்த திரைப்படத்தின் சூட்டிங் 18 நாள் நடைபெற்ற நிலையில் அதில் நடித்த அஜித் பிறகு விலகியதால் அவருக்கு பதில் சூர்யாவை வைத்து படத்தை வசந்த் எடுத்து முடித்துள்ளார்.

இதிகாசம்:
அஜித்தை வைத்து சிட்டிசன் என்ற மாஸ் திரைப்படத்தை கொடுத்த சரவண சுப்பையா இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைய இருந்த திரைப்படம் தான் இதிகாசம். வரலாற்று கதை அம்சம் கொண்ட திரைப்படமாக இது உருவாக இருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப் படத்தை கைவிட்டனர்.

திருடா:
அஜித் நடிப்பில் கலந்து 2004 ஆம் ஆண்டு உருவாக இருந்த திருடா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருந்தார். நடிகர் அஜித்தின் டாக்டராக நடித்தார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் படம் டிராப் ஆனது.
