நாகேஷ் முதல் யோகி பாபு வரை.. அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்களின் லிஸ்ட்..!!

By admin on ஆவணி 30, 2024

Spread the love

அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சந்திரபாபு:
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் சந்திரபாபு. அதன் பிறகு தனது திறமையால் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். சிவாஜி எம்ஜிஆர் ஆகியோருக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரு காமெடி நடிகர் இருந்தால் என்றால் அது சந்திரபாபு தான். மற்ற காமெடி நடிகர்களை விட அந்த காலத்தில் சந்திரபாபு தான் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார். ஒரு சில படங்களில் சந்திரபாபு ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

   

நாகேஷ்:
பிரபல காமெடி நடிகரான நாகேஷ் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1959-ஆம் ஆண்டு ரிலீசான தாமரைக் குளம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் நாகேஷ். அதன் பிறகு குறுகிய காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்களில் நாகேஷும் ஒருவர்.

   

 

கவுண்டமணி:
முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார். வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என அனைத்திலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். செந்திலுடன் இணைந்து கவுண்டமணி நடிக்கும் காட்சிகள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. செந்தில் குறைவான சம்பளமே வாங்கியுள்ளார். ஆனால் கவுண்டமணி பல திரைப்படங்களில் ஹீரோவுக்கு நிகரான சம்பளத்தை வாங்கியுள்ளார்.


வடிவேலு:
என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் வடிவேலு. வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் டயலாக் டெலிவரிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்றும் வடிவேலு அவரது படத்தில் பேசிய வசனங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அவரது டயலாக்கை வைத்து ஏராளமான மீம்ஸ் வரும். முன்னணி நடிகர்களின் படத்தில் வடிவேலு நடித்துள்ளார் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தெரிகிறது.

சந்தானம்:
சந்தானம் கடந்த 2004 ஆம் ஆண்டு ரிலீசான மன்மதன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இதயதிருடன், சில்லுனு ஒரு காதல், அழகிய தமிழ் மகன், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, தில்லாலங்கடி உள்ளிட்ட ஏராளமான படங்களில் சந்தானம் நடித்துள்ளார். காமெடியனாக நடிக்கும் போது சந்தானம் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ள தற்போது ஹீரோ ஆனதும் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.


யோகி பாபு:
முன்னணி நடிகர்களின் படத்தில் யோகி பாபு காமெடியனாக நடித்துள்ளார் கலகலப்பு, பட்டத்து யானை, யாமிருக்க பயமேன், மான் கராத்தே, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடித்துள்ளார். காமெடியனாக நடிக்கும் படங்களுக்கு யோகி பாபு ஒரு நாளைக்கு 5 லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் ஹீரோவாக நடிக்க 5 முதல் 7 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தெரிகிறது.


சூரி:
சூரியின் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். வெண்ணிலா கபடி குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சூரி காமெடியனாக நடித்துள்ளார். விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். சூரி நடித்த கருடன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடியனாக நடித்த போது ஒரு படத்திற்கு சூரி ஒன்று முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். தற்போது ஹீரோவாக ஆனதும் பத்து கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தெரிகிறது.