சின்ன கல்லு போட்டு பெத்த லாபம் பார்த்த சன் பிக்சர்ஸின் 5 படங்கள்.. Lifetime செட்டிலிமெண்ட் பண்ண ஜெயிலர்..

By Deepika

Updated on:

இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தான் என சில தினங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் கலாநிதி மாறன் தயாரித்ததே வெறும் 10 படங்கள் தான் என்ற உண்மை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். எந்திரனில் ஆரம்பித்து ஜெயிலர் வரை ஸ்டார் நடிகர்களால் படங்களை மட்டுமே சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

Sunpictures

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் படங்களை மட்டும் தான் இவர்கள் தயாரித்துள்ளனர். அதுதான் இவர்களின் புத்திசாலித்தனமும். ஆம், பெரிய நடிகர்களின் படங்கள் பெரிய வசூலை குவிக்கும் என்பது இவர்களுக்கு தெரியும், அதனால் ஒரு தொகையை முதலீடாக மட்டும் படம் வெளியான பின் அதிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு வரை அதிக லாபம் பெற்றுள்ளனர். அதுகுறித்து இந்த் பதிவில் பார்க்கலாம்.

   

காஞ்சனா 3

Kanchana 3

முனி என்ற திரைப்படத்தின் மூலம் ஹாரர் படங்களின் சீரிஸை தமிழில் தொடங்கினார் ராகவ லாரன்ஸ். முனி, காஞ்சனா 1, காஞ்சனா 2 என தொடர்ந்து ஹிட் கொடுத்த ராகவ லாரன்ஸை அமுக்கியது சன் பிக்சர்ஸ். காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரித்தது. அதற்கு வெறும் 40 கோடி மட்டுமே முதலீடு போட்டது சன் பிக்சர்ஸ், அவர்கள் கணக்கு போட்ட மாதிரியே பெரும் லாபத்தை ஈட்டியது, காஞ்சனா 3 படத்தின் வசூல் 130 கோடி. அதாவது மூன்று மடங்கு லாபம்.

நம்ம வீட்டு பிள்ளை

Namma veetu pillai

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நடராஜ் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. பெரிதாக இந்தப்படம் மக்களை கவரவில்லை என்றாலும் வசூலில் சூடு பிடித்தது. வெறும் 40 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 70 கோடி கலெக்ஷனை அள்ளியது.

திருச்சிற்றம்பலம்

Thiruchitramabalam

தனுஷ் நடிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். வெகு நாட்களுக்கு பிறகு குடும்ப கதையில் நடித்தார் தனுஷ். நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாக்கியராஜ் என நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருந்தனர். இந்த முறை 30 கோடியை இறக்கியது சன் பிக்சர்ஸ் ஆனால் படத்திற்கு கிடைத்த வசூல். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக வசூல் செய்தது இந்தப்படம்.

எதற்கும் துணிந்தவன்

Etharkkum thunindhavan

என்ன நம்பிக்கையோ தெரியவில்லை மீண்டும் பாண்டிராஜை நம்பி தயாரித்தது சன் பிக்சர்ஸ். சூர்யா, ப்ரியங்கா மோகன் நடிக்க 75 கோடி தயாரிப்பில் உருவானது எதற்கும் துணிந்தவன். இதன் வசூல் 175 கோடி. நம்ம வீட்டு பிள்ளையில் விட்டதை எதற்கும் துணிந்தவனில் பிடித்தது சன் பிக்சர்ஸ்.

பீஸ்ட்

Beast

அடுத்ததாக நெல்சன் திலீப்குமாரை நம்பி இறங்கியது சன் பிக்சர்ஸ், ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் என ஹிட் கொடுத்தால் பீஸ்ட் படத்திற்கு செலவை அள்ளி வழங்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். விஜய், பூஜா ஹெக்டே நடிக்க 150 கோடியில் உருவான பீஸ்ட், 300 கோடி வசூல் செய்தது.

ஜெயிலர்

Jailer

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் மூலம் தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இறங்கியது, அடுத்தாக பேட்ட என்ற ஹிட் படத்தையும் கொடுத்தது. மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி கொடுக்க வேண்டும் என நினைத்த சன் பிக்சர்ஸ் மீண்டும் நெல்சன் உடன் இணைந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தயாரித்தது. பல பெரிய ஆண்டிகள் நடித்த இந்த படத்தின் செலவு 200 கோடி ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 650 கோடி வசூல் செய்தது.

இப்படி சின்ன சின்ன முதலீடு செய்து அதிக லாபம் பெற்றது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

 

author avatar
Deepika