என்னப்பா சொல்றீங்க.. எம்.ஜி.ஆர் நடித்து தோல்வியடைந்த படங்கள் இத்தனை இருக்கா..? லிஸ்ட் பெருசா போகுதே..!!

By Priya Ram

Published on:

சிவாஜி, எம்ஜிஆர் படங்கள் என்றாலே அது சூப்பர் ஹிட் தான். அந்த அளவுக்கு அவர்களது நடிப்பு சிறப்பாக இருக்கும். இந்த நிலையில் எம்ஜிஆர் நடித்து தோல்வியான படங்களும் ஏராளம் உள்ளது. அது என்னென்ன தெரியுமா? ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த நல்லவன் வாழ்வான், கண்ணன் என் காதலன், ஒரு தாய் மக்கள், ராமன் தேடிய சீதை, கொடுத்து வைத்தவன், கணவன், நீரும் நெருப்பும், சங்கே முழங்கு ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

   

அடுத்ததாக கே. சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த உழைக்கும் கரங்கள், பணத்தோட்டம், சந்திரோதயம், கலங்கரை விளக்கம் ஆகிய படங்களும் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடவில்லை. நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஏ பி நாகராஜன். இவர் எம்ஜிஆரை வைத்து இயக்கிய நவரத்தினம் படம் தோல்வியடைந்தது. இயக்குனர் சாணக்கியா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த புதிய பூமி, நான் ஆணையிட்டால் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக டி.ஆர் ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த பணம் படைத்தவன், கூண்டுக்கிளி, பறக்கும் பாவை, பாசம் ஆகிய படங்கள் நூறு நாட்கள் திரையரங்குகளில் ஓடவில்லை. அடுத்ததாக எம்.ஏ திருமுகம் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த தொழிலாளி, தாய்க்கு தலை மகன், தேர்த்திருவிழா, கன்னித்தாய், விவசாயி, தனிப்பிறவி, காதல் வாகனம் ஆகிய படங்கள் மக்களுடைய வரவேற்பை வரவில்லை.

இதனையடுத்து பி ஆர் பந்துலு பல வெற்றி படங்களை இயக்கியிருந்தாலும் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான தேடிவந்த மாப்பிள்ளை, நாடோடி ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ஊருக்கு உழைப்பவன், அன்னமிட்ட கை, நான் ஏன் பிறந்தேன் ஆகிய படங்கள் நூறு நாட்கள் திரையரங்குகளில் ஓடவில்லை. ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன், நாம், கலையரசி அரசிளங்குமரி ஆகிய படங்களும் படுதோல்வியை சந்தித்தது.

Actor MGR

author avatar
Priya Ram