இன்றே கடைசி நாள்…. பான் கார்டுடன் ஆதார் இணைக்க கடைசி வாய்ப்பு… ஆன்லைனில் இணைக்க இதோ எளிய வழி…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிதி தரவுகளை முறைப்படுத்தும் வகையில் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதை வருமானவரித்துறை கட்டாயமாகியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்று போல் ஆயிரம் ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி தங்களுடைய பான் கார்டு ஆதார் உடன் இணைக்க வேண்டும். இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் இணைக்க தவறினால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்க தவறினால் வருமான வரி செலுத்துதல் மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது என்றும் அதிகப்படியான TDS, TCS பிடித்தம், 15G படிவங்கள் நிராகரிப்பு மற்றும் வங்கி சேவை நிறுத்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். அதே சமயம் உங்களுடைய பான் கார்டு எண்ணை எப்போது வேண்டுமானாலும் உடனடியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அதாவது காலதாமதம் கட்டணம் செலுத்தி ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

   

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முதலில் வருமான வரி இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். Quick Links > Link Aadhar Card- என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். * இந்தப் பக்கத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டு ‘Validate’ கொடுக்கவும். * உங்களது பான் ஆதார் எண்ணோடு இணைந்திருந்தால், ‘Already Linked’ என்று தெரிவிக்கும். * இணைக்கப்படவில்லை என்றால் அதில் கேட்கும் விவரங்களை கொடுத்து ரூ 1,000 அபராதத்துடன் இணைக்க முடியும்.