Connect with us

Block Buster ஹிட்டான படத்தின் part 2-வை எடுக்க காத்திருக்கும் லிங்குசாமி… வலை போட்டு தேடியும் கிடைக்காத கதாநாயகன்…

CINEMA

Block Buster ஹிட்டான படத்தின் part 2-வை எடுக்க காத்திருக்கும் லிங்குசாமி… வலை போட்டு தேடியும் கிடைக்காத கதாநாயகன்…

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் முதன் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து 2001ல் ‘ஆனந்தம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முதன்முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ரன், சண்டக்கோழி ,பையா, வேட்டை, அஞ்சான் என பல சூப்பர் ஹிட் படங்களை திரையுலகில் கொடுத்துள்ளார். இவருடைய திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும், அதிக வசூலையும் ஈட்டியும் வருகிறது.  இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

   

 

தெலுங்கில் பிரபல நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து இவர் இயக்கிய  ‘தி வாரியர்’ திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி சமீபகாலமாக இருக்கும் இடமே தெரியவில்லை. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை பற்றிய தகவல்கள் தான் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

அதாவது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் நடிகை தமன்னாவை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் ‘பையா’. தற்பொழுது இத்திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். ஆனால் கதாநாயகன் தான் கிடைக்கவில்லையாம். சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தின் ஹீரோவை வலை போட்டு தேடி வருகிறாராம் லிங்குசாமி. அப்படின்னா விரைவில் ‘பையா 2 ‘அப்டேட் வெளியாகுமா..? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
To Top