Actor Rajkiran

டைரக்டர் சேரனை கதறவிட்ட மகளின் காதல் கதை – அதே போல் இன்றும் தொடர்ந்த ராஜ்கிரண் மகளின் காதல் கதை

By Sumathi on பிப்ரவரி 5, 2024

Spread the love

இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக பல வெற்றிப் படங்களை தந்தவர். ஒரு சமுதாய பொறுப்புள்ள படைப்பாளியாக தன் படங்களில், நல்ல சிந்தனைகளை சமுதாயத்துக்கு தந்தவர். பாரதி கண்ணம்மா, பொற்காலம், இன்னொரு தேசிய கீதம், ஆட்டோகிராப் என பல படங்களில் தனது முத்திரையை பதித்தவர்.

இவரது வாழ்விலும் ஒரு மோசமான காலகட்டம் இருந்தது. அதுதான் இவரது இளைய மகள் தாமினியின் காதல் கதை. இந்த விவகாரத்தால் மிகவும் மனமுடைந்து போன சேரன், கோர்ட் வாசலில் மீடியாக்களை பார்த்து கையெடுத்து கும்பிட சம்பவம் எல்லாம் அப்போது நடந்தது.

   

   

டைரக்டர் சேரனின் இளைய மகள் தாமினி, நடன இயக்குநர் சந்துரு என்பவரை காதலித்தார். முகநூலில் துவங்கிய இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. முதலில் இந்த காதலை அறிந்த இயக்குநர் சேரன் ஏற்றுக்கொண்டார். பின்னர் வேண்டாம் என மகளிடம் மறுப்பு தெரிவித்தார்.

 

இதையடுத்து மகள் தாமினி, சேரனிடம் இருந்து விலகி, வீட்டை விட்டு வெளியேறி காதலன் சந்துரு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மேலும், தனது அப்பா சேரனால், காதலன் சந்துரு உயிருக்கு ஆபத்து என போலீசிலும் புகார் அளித்து விட்டார். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இது அப்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து இயக்குநர்கள் சேரன், அமீர், சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடன இயக்குநர் சந்துரு குறித்த முழு தகவல்களையும் திரட்டினர். சந்துரு என்பவர், 2 பெண்கள் இருக்கும் வீடுகளில் ஒருவரை காதலிப்பதாக நடித்து, அந்த குடும்பத்துக்கு திருமண அழுத்தம் கொடுத்து பணம் பறிப்பவர், பின்னர் காதலியை கழட்டி விடும் நபர் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கோர்ட்டில், பலமுறை தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட நிலையில், இறுதியாக அவர் தன் பெற்றோருடன் செல்ல சம்மதித்தார். அப்போது மகளின் வாழ்க்கை காப்பாற்ற நிலையில், கோர்ட் வாசலில் கதறி அழுத சேரன், மீடியாக்களை கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதபடி சென்றார். இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, அதே போல் நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவும், முகநூலில் நடிகர் முனீஸ் ராஜாவுடன் பழகி, இப்போது பிரிந்துள்ள நிலையில், கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.