“தவெக-வை வீழ்த்துவதே ஃபர்ஸ்ட் டார்கெட்”… ஸ்டாலின் போட்ட ரகசிய உத்தரவு… அறிவாலயத்தில் அதிர்ச்சி குண்டு… கதறும் திமுக நிர்வாகிகள்….!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

திமுகவில் கள ஆய்வுக்குழு அமைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்துவதே தற்போதைய முதன்மைப் பணி என்றும், உட்கட்சி மறுசீரமைப்பு விவகாரங்களை பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழுவும், மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்புகளும் வெறும் கண்துடைப்புதானா என்ற அதிருப்தியில் கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.