திடீர் திருப்பம்… மனுவை வாபஸ் பெற்ற தமிழக அரசு… ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்த ஆக்ஷன்…. வெளிவரப்போகும் உண்மைகள்…..!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் இருந்து தற்போது வாபஸ் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளதால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான தடைகள் முழுமையாக விலகியுள்ளன.