இபிஎஸ்-க்கு காலையிலேயே ஷாக்… மீண்டும் ஒன்றிணையும் அதிமுக… பரபரப்பை கிளப்பிவிட்ட மாஜி அமைச்சர்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் இபிஎஸ் அதிமுக தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றார்.

சமீபத்தில் கூட செங்கோட்டையன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பெயரை கட்சியிலிருந்து நீக்கினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

   
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால் நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டு வந்தால் அவர்களுக்காக தலைமையிடம் பேச தயார் என்று முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கூறியுள்ளார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளிடம் உள்ளதை அவரது பேச்சு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். முதலில் செங்கோட்டையன் கட்சி ஒன்றுபட வேண்டும் என கிளம்பி கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் தற்போது ஓ.எஸ் மணியன் கட்சி ஒன்றுபட குரல் கொடுத்துள்ளது அடுத்த பரபரப்பை கிளப்பி உள்ளது.