குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டம், மெண்டர்டா தாலுகாவில் உள்ள தேட்காடியா கிராமத்தில் ஆறு வயது சிறுமி ஒருவரை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, சிறுமி விளையாடச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுதை அவரைத் தாக்கி தூக்கிச் சென்றுள்ளது. பின்னர், அந்த சிறுமியின் உடல் அருகில் இருந்த விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டது.
இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வனத்துறையினரும் காவல்துறையினரும், இந்த வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊருக்குள் புகுந்து சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் சுற்றுவட்டார கிராம மக்களிடையே கடும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2103826922748911657/video/1
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மனிதர்களைத் தாக்கும் இந்த சிறுத்தையைக் கண்டறிந்து பிடிப்பதற்காக, அப்பகுதியில் கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தவும், வனத்துறையினர் அடங்கிய சிறப்புக் குழுக்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.
