நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பட்டப்பகலில் புகுந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயை லாவகமாக வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரியில் பகல் நேரத்திலேயே வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயைக் குறிவைத்துச் சிறுத்தை திடீரெனப் பாய்ந்துள்ளது.
அந்தப் பயங்கரமான தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, மலைப் பிரதேசங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுத்தைகளின் நடமாட்டம் பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பது குறித்தும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
