குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஒரு வயது சிறுமி சிறுத்தையால் கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் டிராம்பக்பூர் கிராமத்தில் நடந்ததாக மாநில வனத்துறையின் தல்கானியா மலைத்தொடரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “அர்ஜுன் நினாமா என்பவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது 1 வயது குழந்தை தாயின் அருகில் அமர்ந்திருந்தபோது, ஒரு சிறுத்தை உள்ளே நுழைந்து அக்குழந்ந்தையை இழுத்துச் சென்றது.
ஆனால் அவரது தாய் சிறுத்தையை விரட்ட முயன்றார், அதை ஒரு பாத்திரத்தால் கூட அடித்தார், ஆனால் அது பலனளிக்கவில்லை. சிறுத்தை குழந்தையை இழுத்து சென்றது. பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அம்ரேலி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு அருகில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .
