Connect with us

லியோவில் விஜய்க்கு மகளாக நடித்திருந்த குழந்தை… இந்த காமெடி நடிகரின் மகளா?…. இவங்க அண்ணன் யாருன்னு தெரியுமா?…!!!

CINEMA

லியோவில் விஜய்க்கு மகளாக நடித்திருந்த குழந்தை… இந்த காமெடி நடிகரின் மகளா?…. இவங்க அண்ணன் யாருன்னு தெரியுமா?…!!!

 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. முதல் நாள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. படம் தற்போது வரை 68 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கட்டாயம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் பேட்டை நடத்தும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

   

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அதை தொடர்ந்து சஞ்சய் தத், பிரியா பவானி சங்கர், அர்ஜுன், மிஸ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரபட்டாலும் நடித்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷாவின் மகளாக வந்து நடித்திருந்த குட்டி பாப்பா யார் என்பது குறித்த தகவல்தான் தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த குழந்தை தற்போது தனது தந்தையுடன் சில பேட்டிகளில் கலந்து கொண்டு லியோ திரைப்படத்தில் நடித்தது தொடர்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.  இந்த பாப்பாவின் தந்தை யார் என்றால் காதலில் சொதப்புவது எப்படி, அரிமா நம்பி, டிக் டிக் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் அர்ஜுனின் மகள் இயல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த குழந்தை இரட்டை குழந்தைகளாகும். அதாவது டாடா திரைப்படத்தில் கவின் அவர்களுக்கு மகனாக நடித்திருந்த இயலன் மற்றும் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கும் இயல் ஆகிய இரண்டு குழந்தைகளும் இரட்டை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top