லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலில் இருந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்ன ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருகின்றனர் .லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி லியோ திரைப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி ரிலீசான மாஸாக வெளிவந்த லியோ ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ ட்ரைலர் வீடியோ…