மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று ரிலீஸ் ஆனது. ட்ரெய்லரை பார்த்ததும் ரசிகர்கள் படத்தை எப்போது பார்ப்போம் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். லியோ படத்தின் ட்ரெய்லரில் இருந்த சில விஷயங்களை நீங்கள் கவனித்தீர்களா? ட்ரெய்லரின் துவக்கத்தில் சீரியல் கில்லராக வருபவர் சாண்டி மாஸ்டர். அவரது வாயில் ரத்த கரை இருப்பது போல விஜயை துரத்தி வரும் விலங்கான நரி இனத்தைச் சேர்ந்த ஹைனா வாயிலும் ரத்தக்கரை உள்ளது.
இதனால் சாண்டி தான் சஞ்சய் தத் அல்லது அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிறிய வயது கேரக்டராக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இருவருமே விஜயை தீவிரமாக தேடி கொண்டிருப்பதால் வில்லனை வெறிபிடித்த விலங்கு போல் காட்டியுள்ளனர். இதனையடுத்து விஜயின் சிறிய வயது கதாபாத்திரத்தில் மேத்யூ தாமஸ் நடிப்பதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்ரெய்லர் அமைந்தது.
ஏனென்றால் மேத்யூ தாமஸ் எதிரியை நோக்கி அம்பு எறிவதும் விஜய் எதிரிகளை நோக்கி துப்பாக்கியால் சுடுவதும் ஒரே மாதிரி இருக்கிறது. விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளாரா என்ற சந்தேகம் இருந்தது அவர் தனது மனைவி திரிஷாவிடம் என்னைப்போல் ஒருத்தன் இருக்கான் அவனுக்கு பதிலாக என்னை துரத்தினால் நான் என்ன பண்ணுவேன் என ஆக்ரோஷமாக பேசும் காட்சி இடம் பெற்றது. ஆனால் அவரே ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புவதால் இரண்டு விஜய்யும் ஒரே விஜய் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஜயை சஞ்சய்தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் வலை போட்டு தேட காரணம் என்ன? ஒருவேளை லோகேஷ் கனகராஜின் படங்களில் இடம்பெறுவது போல போதைப்பொருள் பின்னணியாக இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பின்னர் ட்ரெய்லர் முடிவில் கௌதம் மேனன் நடந்தது என்னன்னு தெரியணும்னா லியோ தான் உயிரோட வரவேண்டும் என கூறுவார். இதனால் முதல் பார்ட்டில் லியோ இருக்கிறாரா? இல்லையா என்ற சந்தேகமும் உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…