தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியுடன் நடிகை திரிஷா நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம், ‘லியோ’. இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்க , செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு தடைகளை தாண்டி நேற்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
அதன்படி லியோ திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்தனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனையும் படைத்தது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர்.
பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘அன்பெனும்’ பாடல் தற்பொழுது ரிலீஸாகியுள்ளது. இந்த பாடலை தற்பொழுது தளபதி ரசிகர்கள் படுவைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த third சிங்கிள் பாடல்…
தஞ்சாவூர் மாவட்டம் பின்னவாசல் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில், உயிருக்கு போராடிய ஒரு பெண்ணைக் காப்பாற்ற பெண் ஊழியர் ஒருவர்…
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) தொடர்பான புதிய விதிகளை ஓய்வூதியதாரர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இதன் படி, தேசிய ஓய்வூதியத்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை,…
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை மோனிஷா ப்ளஸ்ஸி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில்…
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் கிதிர்பூர் ரயில் நிலையம் அருகே, இளைஞர்கள் சிலர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் நடந்து…
அமெரிக்காவின் லாங் ஐலேண்ட் நகரத்தில், ஓடும் காரின் பின்புறத்தில் இரண்டு நாய்களைக் கட்டி இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக…