Connect with us

CINEMA

ஜெயிலரிடம் தோற்றுப்போன லியோ.. அதுவும் இத்தனை கோடியா..? டார்கெட்டை தொடவே முடியாது போலயே..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். லியோ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீஸ் ஆன 4 நாட்களில் உலக அளவில் 400 கோடி வசூலித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனை படைத்தது லியோ. முன்னதாக லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தை விட அதிகமாக இருக்குமா என விவாதங்கள் நடைபெற்றது.

முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ முதல் வாரத்தில் 461 வசூல் செய்தது. 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. கேரளாவில் அதிகமாக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது லியோ. ஆனால் உலக அளவில் லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை பின்தங்கி இருப்பதாக தெரிகிறது.

அதாவது ஜெயிலர் படம் உலக அளவில் 625 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆனால் லியோ படம் உலக அளவில் 570 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்தது. இனி திரையரங்குகளில் ஓடினாலும் கூட குறைந்தபட்சம் 575 கோடிக்கு மேல்தான் வசூல் ஆகும். இதனால் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்காது என கூறப்படுகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top