கோலிவுட் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் நாளை உலகம் எங்கும் வெளியாக இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார் .

அதைத்தொடர்ந்து சஞ்சய்தத், இயக்குனர் மிஸ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரபல திரைப்பட விமர்சகரும் வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினருமான உமையர் சந்த் தெரிவித்திருந்ததாவது ஆரம்பம் முதல் இறுதி வரை படம் அட்டகாசமாக இருக்கின்றது. முழுக்க முழுக்க விஜயை சுற்றிய கதைகள்தான் அதிக அளவில் இருக்கின்றது. ஆரம்பம் முதல் இறுதி வரை தீயாக நடித்திருக்கின்றார் நடிகர் விஜய் என பெருமையாக பேசி இருக்கிறார். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

