நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் உலகம் முழுவதும் தோராயமாக ஜெயிலர் படம் 525 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல்வேறு எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது. படத்தின் நான் ரெடி பாடல் வெளியானது முதல் ட்ரெய்லர் வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அப்படி இருக்க ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்குமா என நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
லியோ படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்தது மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இந்நிலையில் லியோ தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 12 நாட்களில் லியோ படம் 540 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜெயிலர் படம் 525 கோடி வசூல் செய்த நிலையில் லியோ திரைப்படம் 540 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ முதல் வாரத்தில் 461 வசூல் செய்தது. தற்போது 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் ஜெயிலர் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…