தளபதி வெறித்தனம்..! ஜெயிலரையே ஓரங்கட்டி அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த லியோ.. தூள் பறக்கும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன்..!!

By admin on ஐப்பசி 14, 2023

Spread the love

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான லியோ படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூரலிகான் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வருகிற 19-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

   

ஏற்கனவே ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது முன்னதாக லியோ படத்திலிருந்து வெளியான பாடல்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் வைப் செய்ய ஆரம்பித்தனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ஆக்சன் காட்சிகள் நிறைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது.

   

 

இந்த படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஏற்கனவே தொடங்கியது. இந்நிலையில் லியோ படம் வட அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடப்பட உள்ளது. அங்கு அதிக இடங்களில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது லியோ.

தளபதி விஜயின் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வசூல் சாதனை படைத்தது. அமெரிக்க பிரீமியர் விற்பனையில் 544 இடங்களில் லியோ 832,689 டாலர் வசூலித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் 340 இடங்களில் வெளியாகி ஜெயிலர் 802,628 டாலர் வசூலித்தது. ஆனால் விஜய்யின் லியோ படம் 2023-ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பிரீமியரில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.