தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய காமெடியாள் அனைத்து தரப்பு வயதினரையும் நாள்தோறும் சிரிக்க வைக்கும் மகனாக இருப்பவர் தான் நடிகர் கவுண்டமணி. கோவையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து கோலோச்சியிரும் கலைஞர்களில் ஒருவராக இருப்பவர்தான் கவுண்டமணி. இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும் கவுண்டர்களாலும் முத்திரை பதித்தவராக விளங்குகிறார். அடிப்படையில் மேடை நாடக கலைஞராக இருந்து அதன் பிறகு சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்தவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணியின் நடிகர்களுடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக செந்திலுடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. செந்தில் லோடு இணைந்து மட்டுமல்லாமல் கவுண்டமணி தனியாகவும் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் கவுண்டமணி பற்றி இதுவரை பலரும் அறியாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கவுண்டமணி முதன் முதலில் சினிமாவில் நுழைந்தபோது அவர் நடித்த கதாபாத்திரம் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி கவுண்டமணி முதல் முதலில் 1970 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தில் டிரைவர் வேடம் போட்டு நடித்திருந்தார். அதன் பிறகு நாகேஷின் நடிப்பில் 1971 ஆம் ஆண்டு வெளியான தேனும் பாலும் என்ற திரைப்படத்திலும் இவர் டிரைவராக ஒரு சிறிய கேரக்டரில் தோன்றியிருப்பார். அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
