அடேங்கப்பா..! லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? கேட்டதும் லைட்டா நெஞ்சு அடைக்குதே..!!

By admin on ஐப்பசி 1, 2023

Spread the love

லெஜெண்ட் சரவணன் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது பிரம்மாண்டமான ஆட்டம் பாட்டம் நிறைந்த அவரது விளம்பரங்கள் தான். அவர் நடித்த திரைப்படத்தை விட விளம்பரங்களை விரும்பி பார்ப்பவர்கள் தான் அதிகம். ஒரு விளம்பரத்தில் லெஜண்ட் சரவணன் ஹன்சிகா தமன்னா போன்ற நடிகைகளுடன் தோன்றி அசர வைத்தார். அவருக்கு 53 வயதாகிறது. ஆனாலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சரவணன் தி லெஜென்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

   

அந்த படத்தை இரட்டை இயக்குனர்களான ஜெடி ஜெர்ரி இயக்கியிருந்தனர். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விமர்சனம் ரீதியாக படத்தின் கதைகளும் பாராட்டுகளை பெற்றது. மேலும் ஓடிடி தளத்தில் தி லெஜண்ட் படம் நம்பர் 1 இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் லெஜன்ட் சரவணன் சொத்து மதிப்பு விவரங்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

   

 

இவருக்கு சொந்தமாக சென்னையில் பல அடுக்குமாடி கட்டிடத்துடன் கூடிய துணிக்கடை, நகை கடை இருக்கிறது. சொந்தமாக பல வீடுகளும் உள்ளது. சமீபத்தில் சொந்த ஊரான திருநெல்வேலியில் லெஜெண்ட் சரவணன் மிக பிரம்மாண்டமாக ஒரு வீட்டை கட்டியுள்ளார். இவரது இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. சரவணனின் வீடு ஹைடெக் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்களாம். அவரிடம் பத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் அமைந்துள்ளது. அவற்றை நிறுத்துவதற்கு எ பிரம்மாண்டமாக பார்க்கிங் ஏரியாவையும் வீட்டில் அமைத்துள்ளார். மேலும் தனது நிறுவனங்கள் மூலமாக ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் முதல் 1.5 கோடி வரை சரவணன் சம்பாதித்து வருகிறார். இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 6000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.