“சாப்பாட்டுக்கு வழியில்லை… பிச்சை எடுக்கும் நிலையில் நான் இருக்கிறேன்…” கதறிய பாவா லக்ஷ்மணன்… உடனே ஓடிவந்து ரூ. 2 லட்சம் கொடுத்த நடிகர்…?!

By Swetha on ஆனி 23, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர் நடிகர் பாவா லக்ஷ்மணன். திரையில் மற்றவர்களை சிரிக்க வைத்த இவரது நிஜ வாழ்க்கை தற்போது பெரும் சோகமாக மாறியுள்ளது. கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்கள் அகற்றப்பட்டன. இதனால் உடல்நலம் குன்றி, படவாய்ப்புகளும் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டார்.

தன்னுடைய தற்போதைய அவல நிலை குறித்து பாவா லக்ஷ்மணன் அண்மையில் உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு சாப்பாட்டிற்கும் மருத்துவ செலவிற்கும் கூட பணமில்லாமல் தவிப்பதாகவும், தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் காலி செய்யச் சொல்வதாகவும் வேதனை தெரிவித்தார். தான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகக் கூறி, தனக்கு உதவுமாறு தமிழக முதல்வர் விஜய் அவர்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.

   

இவரது இந்த நிலையை அறிந்த பிரபல நடிகரும், தொழிலதிபருமான ‘லெஜண்ட்’ சரவணன் உடனடியாக பாவா லக்ஷ்மணனுக்கு உதவ முன்வந்துள்ளார். தனது உதவியாளர்களை நேரடியாக அனுப்பி, அவரது அவசர மருத்துவ மற்றும் வாழ்வாதார செலவுகளுக்காக ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவிய லெஜண்ட் சரவணனுக்கு பாவா லக்ஷ்மணன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.