செம மாஸ்…. நியூ லுக்கில் கலக்கும் லெஜெண்ட் சரவணன்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!

By Archana

Published on:

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரவணன் அருள்.தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார்.

   

தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை வைத்து அவர்களுடன் இணைந்து நடித்த விளம்பரம் எடுத்தார். அதனால் பலரும் இவரை கேலி செய்து வந்தனர்.

அதற்கெல்லாம் செவி சாய்க்காத சரவணன் அடுத்த கட்டமாக படங்களின் நடிக்கும் ஆசையை நிறைவேற்றினார். அதன்படி தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார். ஜேடி ஜெர்ரி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார்,பிரபு மற்றும் நாசர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீர்த்திகா திவாரியும் நடித்துள்ளார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவுக்கு வசூல் ஈட்டியது. இதனைத் தொடர்ந்து அவர் விஜயின் லியோ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல செய்திகள் வெளியானது.

தற்போது புதிய படத்திற்காக வித்தியாசமான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எந்த படத்திற்காக இவர் தன்னுடைய லுக்கை இப்படி மாற்றியுள்ளார் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Archana