“கைமாறிய 1000 கோடி” அதிமுகவை உடைத்த லால்குடி MLA லீமா ரோஸ்..? பின்னணியில் இருந்த ‘மாஸ்டர் பிளான்’ அம்பலம்… பரபரப்பில் தமிழக அரசியல்..!!

By Soundarya on வைகாசி 16, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிற கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. மறுபுறம், 172 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பலத்த சரிவைச் சந்தித்தது. இந்தத் தொடர் தோல்விகள் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுகவுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாகத் தகவல் வெளியானது. இதற்கு சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாகப் பிளவு ஏற்பட்டுள்ளது. தவெகவை ஆதரித்த குழுவில் இருந்த மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி உடனடியாகப் பறித்தார். மேலும், கட்சித் தலைமைக்கு எதிராகச் சென்று தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏ) தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் அவர் மனு அளித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், சி.வி.சண்முகம் ஆதரவு குழுவிற்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

   

அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட உடைப்பிற்கு லால்குடி தொகுதி எம்.எல்.ஏ-வான லீமா ரோஸ் தான் முக்கியக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐஜேகே (IJK) கட்சியில் இருந்து விலகி, எஸ்.பி. வேலுமணியின் ஆதரவோடு அதிமுகவில் இணைந்த இவருக்கு, கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டின் மிகப்பணக்கார வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்ற இவர், தேர்தல் முடிவுக்குப் பின் தவெகவிற்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தார். தவெக தலைமைக்கும் எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டதும் இவரே என்று கூறப்படுகிறது.

   

இவ்விவகாரத்தில் அதிமுகவை உடைப்பதற்காக சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு லொட்டரி சீட்டு பணம் கைமாறியுள்ளதாக அதிமுக நிர்வாகி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அதிருப்தி வெளியிட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், “அந்தப் பெண்மணியை (லீமா ரோஸ்) கட்சிக்குத் தலைவியாக்க வேலுமணி திட்டம் போட்டார்; அதற்காக 1000 கோடி ரூபாய் வாங்கப்பட்டது, தற்போது பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் கத்துகிறார்” என்று பகிரங்கமாகச் சாடியுள்ளார். இந்த 1000 கோடி ரூபாய் பேரப் புகார் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.