முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் பட சம்பளம் இவ்வளவுதானா?…. அவரே கூறிய அதிர்ச்சி தகவல் இதோ….

By Begam

Published on:

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முதல் படத்தின் சம்பளம் பற்றிய விவரங்களை அவரே தற்போது கூறியுள்ளார்.

‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் ‘கைதி’, இளைய தளபதி விஜய் உடன் ‘மாஸ்டர்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக இவர் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய  இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

   

இளைய தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ‘தளபதி 67’ படத்தில் இருவரும் இணைந்துள்ளனர் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படம் முழுவதுமாக லோகேஷ் படமாக இருக்கும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் ‘தளபதி 67’ படத்தின் பூஜையும் நடைபெற்றது .இந்நிலையில் தன்னுடைய  முதல் படத்தின் சம்பளம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் மாநகரம் படத்திற்கு அவருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டதாகவும், டிடிஎஸ் போக ரூபாய் 4.50 லட்சம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது விடாமுயற்சியினால் தற்பொழுது முன்னணி இயக்குனராக மாறி லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர், தற்பொழுது கோடியில் சம்பளம் வாங்கிக் கொண்டுள்ளார். இவரது விடாமுயற்சிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.