தனது நண்பனை வைத்து அடுத்த காயை நகர்த்தும் லோகேஷ்.. கல்லா கட்ட உதவுவாரா லாரன்ஸ்..?

By Priya Ram

Published on:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீசான லியோ திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் நடிகர் லாரன்ஸ்காக ஒரு கதையை எழுதியுள்ளாராம். அந்த படத்தை லோகேஷ் கனகராரின் நெருங்கிய நண்பர் ரத்தினகுமார் இயக்க உள்ளார்.

   

இயக்குனர் ரத்தினகுமார் அமலாபாலை வைத்து ஆடை திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் ரத்தினகுமார் இணை எழுத்தாளராகவும் வேலை பார்த்தார்.

எனவே லோகேஷ் எழுதிய கதையை நடிகர் லாரன்சை வைத்து ரத்தினகுமார் படமாக உள்ளாராம். இதனை லோகேஷ் கனகராஜின் GSquad தயாரிக்க உள்ளதாம். இது ஹாரர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாககும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram