BIG BREAKING: அரசியலுக்கு வருகிறேன்.. அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

அரசியலில் நுழைய உள்ளதாகப் பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் புதிய கட்சி தொடங்க உள்ளாரா அல்லது ஏற்கனவே உள்ள கட்சியில் இணைந்து செயல்பட உள்ளாரா என்பது குறித்த பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், தனது அரசியல் வருகையை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு அவர் தனது விரிவான அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/sunnewstamil/status/2065301315077787818/video/1

   

அவரது இந்தத் திடீர் அரசியல் அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதா? அல்லது புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரா? என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக எழுந்துள்ளன.