இந்த புத்தாண்டுக்குள் பட்ஜெட் விலையில் போன் வாங்க வேண்டும் என்று விரும்பினால் இந்த செய்தி உங்களுக்காக தான். LAVA நிறுவனம் தனது அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான LAVA Blaze Duo 5G மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த போனின் சிறப்பம்சங்கள் என்ன இதன் விலை என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

LAVA Blaze Duo 5G ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக வருகிறது. இதில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என்ன இரண்டு டிஸ்ப்ளேகள் இருக்கிறது. 6.67 இன்ச் அளவு கொண்ட மெயின் டிஸ்ப்ளே 120 hz புதுப்பிப்பு வீதம் 3d amoled display பின்பறம் 1.58 இன்ச் அளவு கொண்ட amoled டிஸ்ப்ளே உடன் வருகிறது.
இதில் பின்பக்கம் இருக்கும் இரண்டாவது டிஸ்ப்ளே உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன் அழைப்பு மற்றும் பல ஆப்ஸ் தகவல்களை காண்பிக்கும். இந்த LAVA Blaze Duo 5G ஸ்மார்ட்போன் 64 mp மெயின் ரியர் கேமராவை கொண்டு இருக்கிறது. 16 எம்பி செல்ஃபி கேமரா இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆதரவை பெறுகிறது. மேலும் 6gb ram 6gb விச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் 8 ஜிபி விர்ச்சுவல் ராமுடன் 128 ஜிபி UFS 3. 1 ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வருகிறது.

5000 mah பேட்டரி 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆண்ட்ராய்டு 14 ஆண்ட்ராய்டு 15 அப்டேட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 16ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை 15000 முதல் 20,000 விலைக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
