தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் அட்லீ. அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்க போவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக அட்லீ பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மீர் என பெயர் வைத்தனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர்கள் தற்பொழுது தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.