பச்சை நிறமே பச்சை நிறமே..! பார்த்தாலே கண்ணு படும் லுக்கில் மேயாத மான் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Soundarya on ஜனவரி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இன்ஜினியரிங் படித்துவிட்டு மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு வந்தவர் தான் இவர்.

   

சினிமாவில் நடிக்க முயற்சி செய்தவருக்கு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இயக்குனர் கார்த்தி சுப்புராஜின் அறிமுகம் ஏற்பட்டு அவர் தயாரித்த மேயாத மான் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

   

 

அதன் பிறகு அவர் இயக்கிய மெர்குரி படத்திலும் இந்துஜா நடித்தார். அடுத்தடுத்து படங்களின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அந்தவகையில் அவ்வப்போது ஏராளமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி தற்போது புது வருடத்தை முன்னிட்டு பச்சை நிற உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.