பெரும் சோகம்..! மறைந்த EX முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் காலமானார்… அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

By Soundarya on ஆடி 19, 2025

Spread the love

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க முத்து காலமானார். கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க முத்து உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய உடலானது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பொது மக்களுடைய அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

மு.க முத்து தமிழ் சினிமாவில் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறர்கள்.