சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் வில்லனாக மிரட்டி வருபவர் தான் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து.
இவர் சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார்.
இந்த சீரியலில் அவர் தனது வில்லத்தனமான நடிப்பை எதார்த்தமாக காட்டி வந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர் திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மறைவை தற்பொழுது வரை ரசிகர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. பலர் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர் என்றே கூறலாம். இந்நிலையில் எதிர்நீச்சல் குடும்பத்துடன் இறுதியாக தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மாரிமுத்துவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாரு கண்ணு பட்டதோ தெரியலையே என்று புலம்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…