முதலமைச்சர் விஜயின் கரூர் பயணத்திற்கு திடீர் செக்?… திமுகவின் அதிரடி மூவ்… கரூர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த அறிவாலயம்… தமிழக அரசியலில் அடுத்த உச்சகட்ட பரபரப்பு…!

By Visaka on ஆடி 7, 2026

Spread the love

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோகமான சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், வரும் ஜூலை 10-ம் தேதி முதன்முறையாக கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், முதலமைச்சரின் இப்பயணத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வருகிறது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடையீட்டு மனுவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய பேச்சுகள் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைக்கும் நோக்கில் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது உரிய வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை நிறைவடையும் வரை முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

   

முதலமைச்சரின் கரூர் பயணம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சிபிஐ விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பாக சிபிஐ-யிடம் அனுமதி பெற தகுந்த வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும் என திமுக தரப்பு கோரியுள்ளது. மூத்த வழக்கறிஞர் ஹுஸேபா அகமதி விடுத்த அவசர கால முறையீட்டைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் ஆலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் தீர்ப்பைப் பொறுத்தே முதலமைச்சர் விஜயின் கரூர் பயணம் அமையுமா என்பது தெரியவரும் என்பதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.