பீகார் மாநிலம் ஆரா பகுதியில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராஜு யாதவ் என்ற நில வியாபாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் இரு முறை சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ராஜு யாதவ், சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்விரோதம் காரணமாக ஏற்கனவே ராஜு யாதவுக்குக் கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கியை எடுத்து நில வியாபாரியைச் சுடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
https://twitter.com/SadanJee/status/2107720768901828864/video/1
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட CCTV காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியிலும், அவர்களை விரைந்து கைது செய்யும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
