கேமியோ-னு Full ரோல் Play பண்ண ரஜினி.. சம்பவம் செய்தாரா மொய்தீன் பாய்..? அனல் பறக்கும் ‘லால் சலாம்’ ட்விட்டர் விமர்சனம்..

By Ranjith Kumar

Published on:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் படமான ஜெய்லர் படத்திற்கு அடுத்தவாறு ரஜினிகாந்த் படத்திற்கு மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் லால் சலாம் படம். இப்படத்தை தன் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தலைவர் நடித்திருக்கும் லால் சலாம் இன்று ஆர்ப்பரிக்கும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஆரம்பத்தில் இருந்தே ரஜினிகாந்த் அவர்கள் இருப்பதாலே அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

   

இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரம் இருந்தாலும் இது சூப்பர் ஸ்டாரின் படமாகவே பார்க்கப்படுகிறது. அதனாலயே இன்று வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கி ரசிகர்கள் தியேட்டர்களில் ஆர்வத்துடன் குவிந்தனர். தற்போது லால் சலாம் படத்தை பார்த்து ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் விமர்சனங்கள் பற்றி இங்கு காண்போம்.

WhatsApp Image 2024 02 09 at 122748 PM

கதையும் அதை இயக்குனர் காட்சிப்படுத்தியிருந்த விதமும் அற்புதமாக இருக்கிறது. அதேபோல் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோல் என்று சொல்லப்பட்டாலும் அது கொஞ்சம் நீட்டிக்கப்பட்டு படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது.ஆனால் கதாபாத்திரங்களின் தேர்வு, சென்டிமென்ட் ஆகியவை மிஸ் ஆகி இருப்பதால் கொஞ்சம் ஏமாற்றமாக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்துள்ளது. இப்படி சில விமர்சனங்கள் வந்தாலும் இன்டர்வெல், கிளைமாக்ஸ், ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் என அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது.

மேலும் இரண்டாம் பாதி முழுவதும் ரஜினியின் ஆதிக்கம் தான். அதனால் அவர் கௌரவ சிறப்பு கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது. படத்திற்கு அதிகமாக பாசிட்டிவ்வான ரிவ்யூ தான் வந்து கொண்டிருக்கிறது, ஆக மொத்தம் லால் சலாம் இந்த வருடத்தின் வெற்றிப்பட வரிசையில் இணைந்து விடும் எனவும் கருத்துக்கள் கூறுகின்றது.

author avatar
Ranjith Kumar