’58 வயதில் எனக்கே இப்படின்னா 20 வயது பெண்களை பத்தி சொல்லவா வேணும்?’.. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஓபன் டாக்…

By Begam

Published on:

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமடைந்தவர். இந்நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. இவர் நடுவராக இருந்து தீர்ப்புகளை வழங்கி பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.

   

அவருடைய நடிப்பில் வெளியான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் மாநில விருதினை பெற்றுள்ளார். சமீபத்தில், Are you ok baby என்னும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் மீண்டும் களமிறங்கினார்.  சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் Host-ஐ தரக்குறைவாகப் பேசுவதுபோல் படத்தில் காட்சியமைக்கப்பட்டுள்ளதே? எனக் கேட்ட கேள்விக்கு, HOSTஆக இயக்குநரால், துரத்தப்பட்டாலும் டிவியின் ஆதரவால் நான் தப்பித்தேன். 58 வயதில் எனக்கே ஊடகத்தில் மரியாதை இல்லாதபோது, 20 வயதில் தொகுப்பாளினியாக வரும் பெண்களுக்கு எவ்வாறு மரியாதை கிடைக்கும்.

என்னை ஒரு நிகழ்ச்சி இயக்குநர் திட்டும்போது, அதில் இருந்து வெளியில் வர எனக்கு 1 வருடம் ஆனது.  அந்தளவுக்கு மனவுளைச்சலுக்கு ஆளானேன். குடும்பம் தான் பக்கபலமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.  58 வயதில் அவருக்கே இந்த நிலைமையா? என ரசிகர்கள் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றனர்.