Connect with us

CINEMA

காலத்தால் அழியாத கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி… எங்க இருந்து அதை சுட்டேன் தெரியுமா?- கங்கை அமரன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை அமரன்.  பாடல் எழுதுவது, இசையமைப்பது, இயக்குனர், நடிகர் என பல துறைகளில் வெற்றி கண்டவர் கங்கை அமரன்.

தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் அவர் வெற்றிகளை சுவைத்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் கமர்ஷியல் வெற்றிப் படமாக உள்ளது. அவர் எழுதிய ஆயிரக் கணக்கான பாடல்கள் கிளாசிக்காக அமைந்துள்ளன. தான் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த போது தன்னை இயக்குனர் ஆக்கியது தன்னுடைய அண்ணன் இளையராஜாதான் எனக் கூறியுள்ளார் கங்கை அமரன்.

   

அவர் இயக்கிய திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றளவும் வணிக சினிமாவின் உச்சமாக இருப்பது கரகாட்டகாரன் திரைப்படம்தான். அந்த படத்தை அப்போதைய காலகட்டத்திலேயே ஒரு கோடி பேர் திரையரங்கில் சென்று பார்த்ததாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் முக்கியமான காட்சிகளில் ஒன்று கவுண்டமணியும் செந்திலும் கலக்கிய வாழைப்பழ காமெடி. கவுண்டமணி செந்திலிடம் இரண்டு வாழைப்பழம் வாங்கி வர சொல்ல அவர் ஒன்றை தின்றுவிட்டு, இன்னொன்றை எடுத்துவந்து கொடுப்பார். அவர் இன்னொன்று எங்கு எனக் கேட்க ‘அதுதான் இது’ என திருப்பி திருப்பி சொல்லி கவுண்டமணியை எரிச்சலாக்குவார்.

இந்த காமெடி காட்சி இன்று பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஒன்று. இந்த நகைச்சுவைக் காட்சி பேசியுள்ள கங்கை அமரன் அந்த காட்சியை ஒரு மலையாள திரைப்படத்தில் இருந்துதான் சுட்டேன் என ஓப்பனாக கூறியுள்ளார். அதில் “அந்த மலையாள படத்தில் வாழைப்பழம் எங்கே என்று கேட்டதும், அதுதான் இது என அவன் சொல்லிவிட்டு உடனே சென்றுவிடுவான். நாங்கள் அதை திருப்பி திருப்பி கேட்பது போல மாற்றினோம். அது நன்றாக வொர்க் அவுட் ஆனது. அந்த காட்சியை சும்மா ஒரு மணிநேரத்தில் எடுத்து முடித்துவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top