‘ஓய்வெடுக்க போகிறேன்’… கணவருடன் சேர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவு…

By Begam on ஆடி 16, 2023

Spread the love

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமடைந்தவர். இந்நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. இவர் நடுவராக இருந்து தீர்ப்புகளை வழங்கி பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.

   

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவருடைய நடிப்பில் வெளியான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் மாநில விருதினை பெற்றுள்ளார். இவருக்கு ஷ்ரதா , ஸ்ருதி, ஸ்ரேயா மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

   

 

இவருடைய மகள் ஸ்வேதாவுக்கு திருமணமாகி  குழந்தைகள் இருக்கிறார்கள். மகள் ஸ்ரேயாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை அளித்த பின்னர் தற்பொழுது நலமாய் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கப் போவதாக இணையத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இதோ அவரின் வைரல் பதிவு…