#image_title
தமிழ் சினிமாவில் இயங்கும் தனித்தன்மை வாய்ந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ் தாணு. 1980 களில் விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த அவர் அதன் பின்னர் மெல்ல மெல்ல தயாரிப்பாளராக வளர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை எடுத்தார்.
தனது படங்களை சிறப்பாக எடுத்து அதற்கு வித்தியாசமான பிரம்மாண்டமான விளம்பரத்தை செய்து படத்தை மக்களைக் கொண்டு சென்று வெற்றி பெறுபவர் தாணு. தான் தயாரித்த கபாலி படத்தின் விளம்பரத்துக்காக ஏர் இந்தியா விமானத்தில் அதன் போஸ்டரை இடம்பெறவைத்தார். அந்தளவுக்கு வித்தியாசமாக யோசிக்கக் கூடியவர்.
இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் சினிமாவின் தன் பயணத்தில் தனக்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் வி ஐ பி படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “விஐபி படத்தில் முதலில் சிம்ரனுக்குப் பதில் லைலாவைதான் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தேன். அவருக்கு நல்ல ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்து அட்வான்ஸ் கொடுக்க ஆள் அனுப்பினேன். என் உதவியாளர் சென்று அட்வான்ஸ் கொடுத்ததும் அவரிடம் கோபமாக லைலா “ஏன் தயாரிப்பாளர் வந்து என்னைப் பார்க்க மாட்டாரா?… இது எனன் அவமரியாதை செய்கிறீர்கள்?’ என சண்டை போட்டார்.
இது என்னடா முதல் படத்திலேயே இப்படி அலப்பறை பண்ணுது இந்த பொண்ணு என நினைத்த நான அவரை உடனடியாக தூக்கிவிட்டேன். அதன் பின்னர்தான் படத்துக்குள் சிம்ரன் வந்தார்.” எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் லைலா கள்ளழகர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தன்னுடைய திறமையான நடிப்பால் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய திரைப்படங்களில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…