அவர் தான் கூப்பிடார்…! நயன்தாரா போட்டிருந்த ஒரே ஒரு நகையின் விலை இத்தனை லட்சமா?…மேடையில் மாஸ் காட்டிய லேடி சூப்பர்ஸ்டார்…!!

By Gayathri on ஆவணி 11, 2026

Spread the love

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, பொதுவாக தனது திரைப்படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருவார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக பெங்களூருவில் நடைபெற்ற ‘டாக்சிக்’ திரைப்படத்தின் ப்ரோமோஷனில் அவர் பங்கேற்றது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பல திரையுலகைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளதால், ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டதற்கான காரணத்தை மேடையில் விளக்கிய நயன்தாரா, தனக்கு விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்ற எண்ணம் இல்லை என்றும், அது தனக்கு சரியாக வராது என்பதாலேயே ஒதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். நடிகர் யஷ் தன்னை தொலைபேசியில் அழைத்ததாலேயே இந்த நிகழ்விற்கு வந்ததாகக் கூறிய அவர், யஷ்ஷின் தனித்துவமான ஆளுமையையும் வெகுவாகப் பாராட்டினார். மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் இணைந்து நடித்த கீது மோகன்தாஸ், இன்று ஒரு சிறந்த இயக்குநராக உருவெடுத்திருப்பதைப் பார்த்து வியப்படைவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

   

இந்த விழாவில் நயன்தாரா பேசியதை விட, அவர் அணிந்து வந்த உடையும் நகைகளும் இணையத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளன. வெளிச்சம் படும்போது பளபளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அவர் அணிந்திருந்த ஆரஞ்சு நிறப் புடவை ‘நீலா பை அனுவர்தன்’ பிராண்டை சேர்ந்தது; அதன் விலை சுமார் 22,900 ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. இதற்கு மேல்பட, நடிகை தமன்னாவுக்குச் சொந்தமான நகைக்கடையில் வாங்கிய 600-க்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ், 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரேஸ்லெட் மற்றும் 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மோதிரம் என பல லட்சம் மதிப்பிலான நகைகளை அணிந்து வந்து நயன்தாரா அனைவரையும் கவர்ந்துள்ளார்.