முதலிரவு அறையில் பிரசவ வலி…! திருமணமான சில மணி நேரத்திலேயே குழந்தை பெற்றெடுத்த மணமகள்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!

By Soundarya on தை 27, 2026

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் திருமணமான அன்றே மணப்பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணும் அவரது காதலரும் திருமணத்திற்கு முன்பே நெருக்கமாக இருந்த நிலையில், பெண் கருவுற்றுள்ளார். இது தொடர்பாகக் காவல்துறை முன்னிலையில் இரு வீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருமணம் முடிந்து மணமக்கள் முதலிரவு அறைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே மணப்பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற நிலையில், அங்கேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. திருமணமான சில மணி நேரங்களிலேயே குழந்தை பிறந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.