சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் ‘லால் ஸலாம்’. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘ லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலானது.

தற்போது லால் ஸலாம் திரைப்படத்தின் டீசர் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த டீசர் வீடியோவில், ‘விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையிலான இரு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுத்து பெரும் கலவரமாக வெடிப்பதுடன் டீசர் தொடங்குகிறது.

இதனால் சில மரணங்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து ரஜினியின் மாஸான என்ட்ரி. ‘விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க. குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க’ என்று ரஜினி பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த டீசர் வீடியோ…
