“மத்திய அமைச்சர் பதவியே எனக்கு பெரிதல்ல”…. டெல்லியை அதிரவைத்துவிட்டு தமிழகம் திரும்பும் எல்.முருகன்…. கசிந்த அதிர்ச்சி தகவல்….!

By Nanthini on ஐப்பசி 18, 2026

Spread the love

மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து எல். முருகன் விலகிய விவகாரத்தில், அவர் தானாக முன்வந்து பதவி விலகவில்லை என்றும், அவரது செயல்பாடுகளில் திருப்தியடையாத மத்திய அரசு அவரது பதவியைப் பறித்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்களிலிருந்து புதியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

கடந்த ஜனவரி மாதமே இவரைப் பதவியிலிருந்து நீக்க மத்திய மேலிடம் முடிவெடுத்த போதிலும், தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அந்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பதவி பறிக்கப்படுவது முற்றிலும் உறுதியானதைத் தொடர்ந்தே, எல். முருகன் தனது பதவியை மரியாதை நிமித்தமாக ராஜினாமா செய்துள்ளார் என்ற தகவல் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.